ஒரு வீட்டுக்கு வரைபடம் பெற்று இரண்டு வீடு கட்டியவர், திருமண யோகம்,  சேலம் மாவட்டம், ஆத்தூர் அழகாபுரம், தாமரை செல்வி.(கிழக்கு வாசல் வீடு)

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் அழகாபுரம் கிராமத்தில் வசித்து வரும் தாமரை செல்வி ஆகிய நான் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு சொந்தமான 60 அடிக்கு 40 அடியில் வடக்கு திசை பார்த்த காலிமனை உள்ளது. அது வடக்கு வீதி குத்தலுடன் அமைந்து இருந்தது.

ஈசான்யத்தில் வீதி முழு குத்தல் வருவதால் சிலர் வடக்கு வாசல் வைத்து வீடுகட்டினால் வீடு மேன்மை வராது என கூறினார்கள். சிலர் வீதி முழு குத்தல் இருப்பதால் தோஷம் ஏற்படும் என கூறினார்கள்.

எனக்கு இந்த வீடுகட்டும் விஷயத்தில் முன்பின் அனுபவம் இல்லை என்ன செய்வது என்று ஒரு குழப்பமாக இருந்தது. எங்கள் ஊர் அழகாபுரத்தில் உள்ள அக்கம் பக்கம் சிலபேர்கள் இடம் விசாரித்ததில் அவர்கள் வாழப்பாடி உள்ள வீரமுத்து மேஸ்திரி இடம் வீடுகட்டி நல்ல முறையில் இருப்பது தெரிய வந்தது. நான் வீரமுத்து மேஸ்திரியை வரவழைத்து என் நிலைமையை எடுத்து கூறினேன். அவர் ஆத்தூரில் உள்ள ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்களை அழைத்து வந்து பார்த்தால் அனைத்தும் சரியாகிவிடும். நான் இதுவரை 30, 40 வீடுகளுக்கு மேல் அவரை கூட்டி வந்து காண்பித்து அவர் கொடுத்த ராஜயோக வரைபடத்தின்படி வீடுகட்டி மக்கள் நல்ல முறையில் அனைவரும் இருக்கின்றார்கள். அதனால் நீங்கள் எதற்கும் கவலைப்பட தேவை இல்லை என கூறினார். 2011 ஆம் ஆண்டு ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்களை வீரமுத்து மேஸ்திரி அவர்கள் அழைத்து வந்தார்கள். அழகாபுரம் இருந்து ஆத்தூர் 10 கிலோ மீட்டர்தான் ரவி சார் அவர்கள் எங்கள் இடத்தை அளந்து பார்த்தும் எங்கள் குடும்ப ஜாதகத்தை பார்த்தும் ஈசான்ய வீதி முழுகுத்தளையும் பார்த்து அதற்கு ஏற்றபடி ராஜயோக கிழக்கு வாசல் வீட்டின் வரைபடத்தை போட்டு கொடுத்தார்கள்.

மொத்த இடத்தில் வீதி குத்தல் போக மீதி இடத்தில் ராஜயோக கிழக்கு வாசல் வீட்டு பிளான் போட்டு காண்பித்ததும் எங்கள் குடும்பத்தில் அனைவர்க்கும் மனநிறைவு ஏற்பட்டது. வீதிகுத்தலில் இருந்து வீடு மட்டும் விடுபட்டு விட்டது. இதுவரை வடக்கு முக வீடாக கட்ட வேண்டும் என எங்கள் எண்ணத்தில், ஜாதகத்திலும் இருந்து ரவி சார் கிழக்கு முக வீடாக மாற்றி அமைத்தார்.

East Facing Vastu House

ராஜயோக வாஸ்து சாஸ்திரப்படி வரைபடம், மனை அடி சாஸ்திர குழி முறிவு படி வீட்டின் ஆயாதிகணக்கு, எங்கள் குடும்ப ஜாதக கணக்கு ஏற்றபடியும், வீடுகட்ட ஆரம்ப நாள் முதல் முடியும் நாள் வரை ராஜயோக நாட்கள் என அனைத்தும் சேர்ந்து 23 பக்கம் கொண்ட ஒரு பட்டியலையும் கொடுத்தார். 2011 ஆம் ஆண்டு அதை பெற்று கொண்ட நான் அதில் குறித்த அளவுபடியும், ராஜயோக நாட்கள்படியும் வீடுகட்டி 2012 ஆம் ஆண்டு வீடு கிரக பிரவேஷம் செய்து குடி ஏறினோம். கீழ் வீடுகட்ட பிளான் வாங்கினோம். வீட்டுக்கு மேல் அதே மாதிரி வீடுகட்டினோம் எல்லாம் ராஜகுரு ரவி சார் கைராசியே ஆகும். நாங்கள் சிறிது கூட மேல்வீடு கட்டுவோம் என்று எண்ணியது கிடையாது. எப்படி நடந்தது என்று எண்ணி பார்க்கவே முடியவில்லை. 2014ஆம் ஆண்டு என் மூத்த பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்து திருமணம் நடந்தது. அவர்களும் நன்றாக இருக்கின்றார்கள்.

என் மனதில் இருந்த பல நாட்கள் வீடுகட்டும் கனவை லட்சியத்தை சிறிதும் சிரமம் இல்லாமல் ஒன்றும் எதிர்பார்த்ததற்கு இரண்டு கிடைத்தது போல் ஒரு வீட்டுக்கு பிளான் வாங்கி இரண்டு வீடு கட்டியது ராஜயோக வாஸ்து சாஸ்திரத்தினால் மட்டுமே நடக்கும் என மனபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் உணர்ந்த பின் நான் அறிந்த இந்த உண்மையை தமிழ்நாடு மக்களும் பயன் பெற வேண்டும் என உயர்ந்த எண்ணத்தில் பேட்டி கொடுத்தேன். ராஜயோக கைராசிக்காரர் ராஜகுரு ரவி சார் அவர்களுக்கு என் குடும்ப சார்பாக நன்றிகள்.

என்றும் உண்மையுள்ள

தாமரை செல்வி, ஆசிரியர்,

ஆத்தூர்

வீடு பிளான் வாங்கியது = 2011
விடுகட்டி கிரக பிரவேசம் = 2012
மகளுக்கு திருமணம் = 2014
பேட்டி அளித்த வருடம் = 2015

3 வருடம் கழித்து பேட்டி எடுக்கப்பட்டது

ஒருவர் நல்லபடியாக இருந்தால் மட்டுமே 3 வருடம் கழித்து

பேட்டி தருவார்கள்.

 

வாசகர் கேள்வி:

வீட்டுக்காரர் ஜாதக கணிதப்படி அவர்களுக்கு
வடக்கு வாசல் வீடு நன்மை தரும் என ஜோதிடத்திலும் ஜோதிட குருமார்கள் கூறி
இருக்கையில் நீங்கள் எப்படி கிழக்கு முகா(திசை)வாசல் வீடாக வீட்டு வரைபடம் போட்டு
கொடுத்து அதுவும் வாங்கியது ஒரு பிளான் கட்டியதோ கீழ், மேழ் இரண்டு வீடு என கட்டி வாழ்வில் வெற்றி அடைய
வைத்தீர்கள். அதன் சூட்சுமம் என்ன?

ராஜகுரு ரவி பதில்:

ராஜயோக வாஸ்து சாஸ்திர கலையின் கணக்குப்படி 12 ராசிக்காரர்களும் ஒரே வாசல் வீட்டில் இருந்தாலும்
வாழ்வில் வெற்றி பலன் ஏற்படும் என சில சிறப்பு விதிகள் உள்ளது. எனது 30 ஆண்டு அனுபவத்தின் 3 தலைமுறை அனுபவத்திலும் அந்த சிறப்புக்களை பயன்படுத்தி
ராஜயோக கிழக்கு முக வீடாக அமைத்து அவர்களை வெற்றி பெற செய்து உள்ளேன்.

வாசகர் கேள்வி:

இந்த படத்தை பார்த்து அப்படியே வீடுகட்டி
கொண்டால் வாழ்வில் வெற்றி ஏற்படுமா?

ராஜகுரு ரவி பதில்:

இந்த வரைபடத்திற்கு துணை 6 வரைபடம் உள்ளது. (அது இங்கு கொடுக்கப்படவில்லை) அதுவும்
வீடுகட்டும் முதல் நாள் இருந்து முடியும் நாள் வரை தமிழ் வருடம் அன்றைய வருஷம்
ராஜயோக கிரக பலன் உள்ள நாட்கள் என ஒரு பட்டியல் இட்ட பைல் ஒன்று உள்ளது. இந்த
இரண்டும் இணைந்தால் முழு வெற்றி ஏற்படும் என்பது உறுதி ஆகும். ராஜயோக வீடாக
அமையும்.

  1. ராஜயோக வீடு வரைபடம் = 30%
  2. குழி கணக்கு முறையில் வரவு, செலவு, வயது அறிதல் = 30%
  3. ராஜயோக நாட்களை அறிந்து வீடு கட்டுவது = 30%
  4. அவரவர் குடும்ப ஜாதகம் பார்த்து அதற்கு ஏற்றது

  போல்
செய்வது = 10%

இந்த நான்கும் சேர்ந்தே 100% ஆகும். ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மேன்மை அடைய
முடியாது என அறிக.