
ராமநாதபுரத்தில் (ராம்நாடு) ஆசிரியராக அரசாங்க உத்தியோக பணியாற்றி வருகின்றேன். என் பெயர் குமார். எனக்கு சொந்தமான கிழக்கு பார்த்த மனை உள்ளது. அதன் நீளம் 58 அடி, அகலம் 28 அடி ஆகும். அதில் ஒரு வீடுகட்ட வேண்டும். எனக்கும் என் மனைவிக்கும் நீண்ட நாள் கனவு ஆகும். எனக்கு திருமணம் நடந்து 9 வருடம் நடக்கின்றது. இதுவரை 10 வாடகை வீடுகளுக்கு மேல் இருந்து வந்தோம். வாஸ்து பார்த்து வாடகை வீட்டுக்கு செல்ல முடியாது, ஏதோ இருக்கின்றதை வைத்துதான் காலம் ஓட்ட வேண்டும். வாடகை வீட்டில் இருக்கும்போது எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வரும் சில நாட்கள் பேசாமல் இருப்போம். ஆஸ்பத்திரி செலவு அடிக்கடி ஏற்படும் வாங்கிய சம்பளம் அதற்கே செலவு ஆகிவிடும். மீதம் படுத்த முடியவில்லை. எங்கள் பெயரில் எந்த ஒரு பணமும் கையிருப்பு இல்லை, இந்த சூழ்நிலையில் வீடு எப்படி கட்டுவது என எண்ணி கொண்டு இருக்கும்போது என் மனைவி யூடிப்பில் சேலம் மாவட்டம் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்கள்.
1)ராஜயோகமாக வீட்டு வரைபடம், 2) மனையடி சாஸ்திரப்படி குழிகணக்குப்படியும், 3) ராஜயோக நாட்கள் அறிந்து அந்த நாட்களில் வீடு கட்டுவது, 4) நாம் குடும்ப ஜாதகத்தையும் பார்த்து அதற்கு ஏற்றபடி வீடு அமைத்து கொடுத்ததை அறிந்து, அதைப் பெற்று சென்ற மக்களும் நல்ல முறையில் வாழ்ந்து வந்து இருப்பதை அவர்களே பேட்டியாக கூறுவதை கேட்டு என் மனைவி என்னிடம் கூறவே நானும் அதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து ரவி சார் அவர்களுக்கு 3.1.2021யில் போன் மூலம் தொடர்பு கொண்டு என்னுடைய முழு குடும்ப சூழ்நிலையும் மனம் விட்டு கூறி வீடுகட்ட பிளான் கேட்டேன். ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லை என கூறினேன். ரவி சார் அவர்கள் நான் போடும் அளவுபடியும், கூறும் முறைபடியும். வீட்டைக் கட்டுங்கள் என கூறினார். என் வீடு பசுமனை என்று ராஜயோக வாஸ்து சாஸ்திரப்படி வரைபடம் போட்டு அதை ஆரம்பிக்கும் முதல் நாள் முதல் கிரக பிரவேஷம் வரையும் என் குடும்ப ஜாதகத்திற்கு ஏற்றபடியும் அமைத்து அனுப்பி வைத்தார். அதை பெற்றுக் கொண்டு ரவி சாரை நம்பி ஆரம்பித்தேன். முதலில் போர் போட்டேன். நல்ல குடி தண்ணீர் கிடைத்தது அவர் கொடுத்த அளவுபடியே வீடுகட்ட ஆரம்பித்து கிரகப் பிரவேசம் முடிந்து வீடு குடி புகுந்தேன். (16.12.2021 தேதியில்) புது வீட்டுக்கு குடி வந்த பின் எங்கள் குடும்பத்தில் சண்டை இல்லை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையாக இருக்கின்றோம்,ஆஸ்பத்திரி செலவும் 4ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது. மனநிறைவு ஏற்பட்டது. நல்ல உறக்கம் ஏற்படுகிறது. நல்ல சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. எங்கள் இருவர் மனமும் நிறைவு பெறவே ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி சார் அவர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு எங்களை பேட்டி எடுக்க வாருங்கள் என கூறினோம். 6 மாதம் கழித்து அவரும் வந்து எங்கள் புது அனுபவத்தை பேட்டியாக எடுத்து சென்றார். கையில் காசே இல்லாமல் ஆரம்பித்து வீடு நல்ல முறையில் முடிந்தது எங்களுக்கு வியப்பு தான். ரவி சார் ராஜயோக கை ராசிக்காரர் ஆவர்.

நானும் அவரும் நேரில் பார்த்தது இல்லை. பேட்டி எடுக்கும் அன்றுதான் நேரில் பார்த்தேன், எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் இருந்து வீடு ஆரம்ப முதல் முடியும் வரை வழிகாட்டி எங்கள் கனவுகளை நினைவுகளாக பெற்றதற்கு மிக்க நன்றிகள். ராஜயோக வாஸ்துவை அனுபவ பூர்வமாக அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த உண்மை புரிய வரும். எங்கள் இதயத்திலும் வாழும் ராஜகுரு ரவி சார் அவர்களுக்கு நன்றிகள்.
என்றும் உண்மையுள்ள
குமார் ஆசிரியர்,
ராமநாதபுரம்
வீடு பிளான் போட்ட தேதி = 3.1.2021 ஆம் ஆண்டு
புது வீடு கட்டி கிரக பிரவேசம் = 16.7.2021 ஆம் ஆண்டு
1 வருடம் கழித்து பேட்டி எடுத்த தேதி = 21.7.2022
பொதுமக்கள் கேள்வி:
எப்படி ஒரு இடத்தை நேரில் சென்று பார்க்காமல் வீட்டு வரைபடம் கொடுப்பது. அந்தந்த ஏரியாவின் டிகிரி கணக்குகள் வேண்டாமா இது எப்படி சாத்தியம் ஆகும். எப்படி சாதித்தீர்கள்?
ராஜகுரு ரவி:
3 தலைமுறையாக வாஸ்து தொழிலை செய்து வருகிறேன். எனக்கு 30 வருட அனுபவம் உண்டு. எனக்கு 54 வயது நடக்கின்றது. ஒருவர் காலிமனையின் அளவு டிகிரி, வரைபடமாகவும், வீடியோவாகவும் பார்த்த பின்பே முடிவு எடுப்போம். என் அனுபவத்தில் எந்த இடத்திற்கு போவது எந்த இடத்திற்கு இடத்தில் இருந்தே செய்து தந்தால் வெற்றி அடைவார்கள் என முழுமையாக தெரியும். அதன்படியே செய்து கொடுத்தோம்.
பொதுமக்கள் கேள்வி:
அவர் மனைவிக்கு மாதம் 5000 ரூபாய் மருத்துவ செலவு செய்து வந்தார்,புது வீட்டுக்கு வந்த பின் 1000 ரூபாய் மட்டும் மருத்துவ செலவு குறைந்தது 4000 ரூபாய் மீதம் ஏற்பட்டது என வீட்டு உரிமையாளர்குமார் கூறினார் அது எப்படி?
ராஜகுரு பதில்:
வாஸ்து சாஸ்திரம் நல்ல முறையில் இருந்தால் அதிகம் மருத்துவச் செலவு ஆகாது. வாஸ்து சாஸ்திரத்தில் தவறு இருந்தால் மருத்துவச் செலவும் அதிகம் ஆகும். இந்த இரண்டு வேறுபாட்டையும் அறிந்த நான் நல்லதை மட்டும் செய்து கொடுத்து மக்களை காப்பாற்றுகிறேன். அதன்படியே குமார் குடும்பத்திற்கு ஆஸ்பத்திரி செலவு குறைந்தது.