சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் காமராஜ் வீட்டு வரைபடத்துடன் புதிய விடும். இடம் வாங்கிய யோகமும், திருமணயோகமும், ஆண்குழந்தை பிறப்பும்(தெற்கு வாசல் வீடு)

சேலம் மாவட்டம் ஆத்துார், வாழப்பாடியில், அம்மன் டையில்ஸ் கடை சிமென்ட் ஏஜென்ட், வைத்து தொழில் செய்து வரும் காமராஜ் ஆகிய நான் 2000 ஆண்டு முதல் 2012 வரை 12 வருடகாலமாக என் மூலமாக ஆத்துாரில் வசித்து வரும் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்கள் 30,40 வீடுகளுக்கு புதுவீடு பிளான் கொடுத்தும். அதன்படி கட்டி மக்களும் நல்லமுறையில் இருக்கின்றார்கள். மற்றும் கட்டி நின்று போன வீட்டை வாஸ்து திருத்தம் செய்து அவர்களும் வீடுகட்டி வேலை பூர்த்தி ஆகி மேன்மை பெற்று உள்ளார். பழைய வீடு மேன்மை அடைய முடியாத நிலையில் உள்ள வீட்டை மேன்மை அடைய செய்து கொடுத்துள்ளார், எனக்கும் அவருக்கும் நல்ல பழக்கவழக்கம் இருந்து வந்தது. என் அக்காவுக்கு இரண்டு பையன்கள் உள்ளார்கள் மூத்தவனுக்கு திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகள், உள்ளது. இளையவனுக்கு 33 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லையே என ஏக்கம் என் அக்காவுக்கும் மாமாவிற்கும் இருந்தது. ஜாதக கணக்குப்படி பரிகாரம் செய்யும் பலன் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில் என் மாமாவுக்கு சொந்தமான 2,100 சதுரஅடி காலி மனை உள்ளது. அதில் இரண்டு பையனுக்கும் சேர்த்து இரண்டு வீடு கட்டி கொடுப்போம் என முடிவு எடுத்து என்னிடம் கூறவே, நான் ராஜகுரு ரவி அவர்களை அழைத்து வந்து பார்த்து பிளான் வாங்கினால் எல்லாம் நல்ல இருக்கும் என்று கூறினேன். நானும் மாமாவும் ஆத்துார் சென்று ரவி அவர்களை பார்த்து என் குடும்ப சூழ்நிலையை எடுத்து கூறி பெரிய பையனுக்கு ஆண் வாரிசு இல்லை, இளைய பையனுக்கு 33வயது கடந்தும் திருமணம் கைகூடவில்லை. நீங்கள் தரப்போகும் புதுவீட்டினால் எங்கள் குறை விலக வேண்டும் என என் மாமா கூறவே ராஜகுரு ரவி அவர்களும் பெரிய பையனுக்கு ஆண்குழந்தை பிறக்கும்.

இளையபையனுக்கு திருமணமும் நடக்கும் இந்த இரண்டும் நடந்தபின் எனக்கு ஒரு பேட்டி கொடுங்கள் என்று கூறினார்கள். நாங்களும் தருகின்றோம் தருகின்றோம் என உறுதி கூறினோம். எங்கள் இருபையன்கள் ஜாதக கணக்கின் ராசிபடி மூத்தபையனுக்கு கிழக்கு பார்த்த வாசல் உள்ள வீடும் இளைய பையனுக்கு தெற்கு பார்த்த வாசல் உள்ள வீடும் ராஜயோக வரைபடமும் போட்டுகொடுத்தார்கள். அதை கட்டும் ராஜயோக நாட்களையும் கொடுத்தார்கள். எங்கள் இடம் அக்கினி மூலை காலிபிளாட் ஆகும். காலிமனையின் அக்கினிமலை 8அடி இழுத்து உள்ளது. அந்த 8அடி மனையை கழித்துவிட்டு நீள் செவ்வகமாக இடத்தை முதலில் சதுரித்து, அதில் நான்கு புறமும் 2அடி காலி இடம் விட்டு கிழக்கு ஒரு வீடு, தெற்கு ஒரு வீடு என இரண்டு வீட்டு பிளான் கொடுத்தார். நாங்களும் 2011 ம் ஆண்டு வாங்கி வந்து 9 மாதத்தில் கட்டி முடித்து கிரகபிரவேஷம் செய்து புது வீடு குடியேறினோம். 4 மாதம் சென்று இளைய பையம் குமார் அவர்களுக்கு திருமணம் நடந்தது குழந்தைகளும் பிறந்தது. 2 காலி மனைகள் வாங்கி உள்ளார்கள் என் மூத்த பையனுக்கும் ஆண்குழந்தை பிறந்தது ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்கள் கூறியது போல் மிகமிக நல்ல முறையில் அனைத்தும் நடந்ததால், எங்கள் வாழ்க்கை நடந்த உண்மை சம்பவங்களை பேட்டியாக கூறி உள்ளோம். எங்கள் குடும்பத்தை தழைக்கவும் நல்ல முறையில் வாழ்க்கையில் வெற்றிபெறவும் வழிகாட்டிய ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

 

என்றும் உண்மையுள்ள,

                               காமராஜ்,அம்மன் டையில்ஸ்

வாழப்பாடி.

வீடு பிளான் வாங்கிய வருடம் = 2011

வீடுகட்டி குடி ஏறிய வருடம் = 2012

3 வருடம் சென்று பேட்டி கொடுத்த வருடம் = 2015

 

வாசகர் கேள்வி

திருமணம் ஆவதற்கும், ஆண்குழந்தை பிறப்பதற்கும் வாஸ்து சாஸ்திரத்தில் வழி உண்டு என எப்படி நிரூபித்தீர்கள்?

ராஜகுரு ரவி பதில்

ஆண்குழந்தை பெற சில ஜாதககிரகபலன்கள் உள்ளது. அதை அறிந்து அன்றைய நாட்களில் அந்த வீட்டைக்கட்ட வேண்டும். 2 வதுபையன் ஜாதக கணக்குபடி திருமண தடையை ஏற்படுத்தும் கிரக நிலையை அறிந்து அதற்கு எதிர்மறை ஆற்றலுள்ள கிரக நிலையை அறிந்து வீடு கட்டுதல் வேண்டும். இதற்கு அனுபவம் வேண்டும். ஜாதகம் வாஸ்து இரண்டையும் சேர்த்து செய்வதால் எனக்கு பரிபூரண அனுபவம் உண்டு.