புதிய வீடும் திருமணயோகமும் , சுடலைமுத்து, தூத்துகுடி, (2 வடக்கு வாசல் வீடு)

தூத்துக்குடியில் வசித்து வரும் சுடலைமுத்து ஆகிய நான் ஆர்மியில் உத்தியோக பணி செய்து வந்தேன். எனக்கு 58 வயது நடக்கின்றது. ரிட்டையர்மெண்ட் ஆகிவிட்டேன் என் மனைவி     E.B யில் உத்தியோக பணி செய்து வருகின்றார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருவரும் படித்து உள்ளார்கள்.

எனக்கு சொந்தமான வீட்டுமனைகள் 4 உள்ளது. அதில் ஒன்று 5 சென்டு. இரண்டாவது இடம் 5 சென்டு ஆகும். இந்த இரண்டு இடத்திலும் 2 வீடு கட்டி அவர் அவர்களுக்கே கொடுத்து விடுவது என முடிவு எடுத்தோம். முதல் பெண் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை உள்ளது  R.I யாக அரசாங்க உத்தியோக பணியில் உள்ளார்கள். வாஸ்து சாஸ்திரப்படி வீடுகட்டலாம் என்று எண்ணி யூடிப்பில் பார்த்தபோது ராஜயோக வாஸ்து என ஆத்தூரில் ராஜகுரு ரவி என்பவர் கூறியது எனக்கு பிடித்து இருந்தது அவர் புத்தகம் போட்டு இருப்பதை அறிந்து தூத்துக்குடி ஈகில் புக் சென்டர் சென்று ராஜயோக வாஸ்து புத்தகத்தை வாங்கி வந்து படித்துவிட்டு அவரை அழைத்து வந்து செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி ராஜகுரு ரவி சார் அவர்களுக்கு 2015ம் ஆண்டு போன் செய்து அவரை வரவழைத்து முதல் 5 சென்டு இடத்தில் 1300 சதுர அடியில் ராஜயோக வடக்கு வாசல் என் பிளான் வாங்கி வீடுகட்டி 2016ம் ஆண்டு கிரக பிரவேசம் செய்து என் மூத்த பெண்ணுக்கு கொடுத்துவிட்டோம் அவர்கள் நல்ல முறையில் உள்ளார்கள். பின் 3 வருடம் சென்று 2018ம் ஆண்டு என் இரண்டாவது பெண்ணுக்கு 5 சென்டு உள்ள இடத்தில் ஒரு வீடுகட்ட வேண்டும் என எண்ணி ரவி சார் அவர்களை மீண்டும் அழைத்து ராஜயோக வடக்கு வாசல் வீடு 1325 சதுர அடியில் பிளான் கொடுத்தார்கள். என் இரண்டாவது பெண்ணுக்கு 25 வயது நடக்கின்றது 2 வருடமாக மாப்பிள்ளை பார்த்தும் அமையவில்லை என்று என் மனவருத்தத்தை எடுத்து கூறினேன். ரவி சார் அவர்கள் வீடுகட்டி கிரக பிரவேசம் முடிந்து 3 அல்லது 6 மாதத்தில் திருமணம் நடக்கும் என்று உறுதியாக கூறினார்கள். நான் அப்படி நடந்தால் உங்களுக்கு ஒரு பேட்டி தருகிறேன் என கூறினேன். வீடு ஆரம்ப முதல் முடியும் வரை 3 முறை வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள் என கூறினோம். அதன்படியே முதன் முதல் வீடுகட்டவும் காம்பவுண்டு சுவர் அமைக்கவும் ரவி சார் அவர்களே இடத்தை அளந்து சதுரித்த கொடுத்து சென்றார். 7 அடி மட்டம் வந்தவுடன் ஒரு முறை வந்து பார்த்து சென்றார்.

வீடு வேலை முடிந்து ,காம்பவுண்டு சுவர் எழும்போது கொடுத்த அளவுக்கு அப்படியே கட்டும்படி கூறினார்கள்.மீதி உள்ள இடத்தை பூச்செடிகள் வைத்து கொள்ளுங்கள் என கூறினார்கள். வீடுகட்டி கிரக பிரவேசம் 2019ல் நடந்தது. எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே வாரத்தில் என் இரண்டாவது பெண்ணுக்கும், திருமணம் நடந்தது என் வீடு கிரக பிரவேசத்திற்கும், திருமணத்திற்கும் ராஜகுரு ரவி சார் அவர்களுக்கு பத்திரிக்கை அனுப்பி வைத்தேன். ராஜருகு ரவி சார் கூறியதுபோல் வீடு கட்டி ஒரே வாரத்தில் திருமணம் நடந்ததே ஆச்சரியம் ஆகும். நானும் அவரை பேட்டி எடுத்து கொள்ளுங்கள் என கூறி அழைத்தேன். அவர் 1 வருடம் கழித்து வந்து பேட்டி எடுத்தார்கள் என் பெண் 6 மாதம் கர்ப்பமாக உள்ளது என் குடும்பத்தில் அனைவரும் சுகமாக உள்ளார்கள். ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி சாரை முழுமையாக நம்பி பலன் பெற்றுள்ளேன். நானே சாட்சியாகும். என் மனம் குளிர்ந்து உள்ளது. தமிழ்நாடு மக்களும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என எண்ணி இந்த பேட்டி தருகிறேன். சுபம்.

என்றும் அன்புள்ள

சுடலைமுத்து,

தூத்துக்குடி.

என் காலிமனை 5 சென்டு அளவு, கிழக்கு 62 அடி, மேற்கு 62 அடி, வடக்கு 38 அடி, தெற்கு 38 அடி மொத்த சதுர அடி 2366 ஆகும். இதன்படி இடம் கிரயம் ஆகி சுவாதீனம் பெற்று கம்பிவேலி அமைத்துவிட்டேன். ரவி சார் இடம் இதை வரைபடமாக போட்டு அனுப்பியும் வீடியோவாக எடுத்து அனுப்பியும் காண்பித்தேன். அவர் இதன் குறுக்கு அளவு வேண்டும் என கூறவே அதை அளந்தேன்.

ஈசான்ய மூலைக்கும், நைறுதி மூலைக்கும், 75.6 அடி வந்தது. அக்னி மூலைக்கும், வாயு மூலைக்கும் 70.2 அழ வந்தது. 5.4 ஐந்து அடி நான்கு அகலம் வித்தியாசம் வந்தது. எனக்கு எதுவும் புரியவில்லை இப்படியுமா? இடம் இருக்கும் என அப்போது தான் முதல் முறையாக புரிந்து கொண்டேன். என் மனதில் உள்ள ஐயப்பாட்டை நீக்கி தருமாரு நல்ல இடமாக மாற்றி அமைத்து தருமாரும் ரவி சார் அவர்களை நேரடியாக வர செய்தேன். இதைப்போல் கட்டடத்திலும் ஏதாவது தவறு வரக்கூடாது என எண்ணி ஆரம்ப முதல் முறயும் வரை 3 முறை ரவி சார் நேரில் வந்து பார்த்து செல்லுமாறு கூறினேன். அவரும் நேரில் வந்து மிக நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள்.

வாசகர் கேள்வி:

கிழக்கு மேற்கு 62 அடியும், வடக்கு தெற்கு 38 அடியும் சரியாக இருந்து குறுக்கு அளவு 5 அடி 2 அங்குளம் தவறாக உள்ளதே இந்த இடத்தில் எப்படி வீடு கட்டுவது என எண்ணமாட்டார் களா?

ஆசிரியர் பதில்:

விற்ற மனைக்கு சொந்தக்கார்க்கும் இந்த குறுக்கு அளவு தெரியாது. அந்த இடத்தை வாங்கிய வீட்டுக்காரர்களுக்கு இந்த சூட்சும கணக்கு தெரியாது, பத்திரம் எழுதும் பத்திரக காரர்க்கும் இது தெரியாது. வாஸ்து தொழிலை முழுமையாக கற்று உணர்ந்தது மக்களை காப்பாற்றும் உண்மை உள்ள வாஸ்து நிபுணர்களுக்கு மட்டுமே இந்த உண்மை கணக்கு விளங்கும்.முன் அனுபவம் இல்லாமல் செய்பவர்களுக்கு இந்த கணக்கு புரியாது.

வாசகர் கேள்வி:

புது வீடுகட்டி குடியேறினால் 3-6 மாதத்தில் திருமணம் நடக்கும் என எப்படி கூறினீர்கள்? புது வீடுகட்டி ஒரே வாரத்தில் எப்படி திருமணம் நடந்தது?

ஆசிரியர் பதில்:

ராஜயோக வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைப்பது முதல் வெற்றி தரும். அந்த பெண்ணுக்கு திருமணத்தடை ஏற்படுத்தும் கிரகம் என்னவோ அதை அறிந்து அதற்கு ஏற்ற ராஜயோக மாண நாட்களை அறிந்து வீடுகட்டி நாள் திருமணம் நடக்கும் என எனக்கு தெரியும் அதன்படியே குறித்து கொடுத்து வெற்றி கண்டேன். இது அனைத்தும் அனுபவத்தில் எடுத்த கணக்கு ஆகும். இடம் தவறு இருப்பினும், ஜாதக கணக்கில் எந்த குற்றம் இருப்பினும் ராஜயோக வாஸ்துப்படி வீடு கட்டினால் மேன்மைப் பெறும் என்பதற்கு இங்கு கட்டி உள்ள இரண்டு வீடுகளும் சான்றுகள் ஆகும்.

வீடு கட்டியது ஒருமுறை மட்டுமே பயன் பெற்றது திருமணம் குழந்தை பாக்கியமும்ஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீடு ஆரம்பத்திலேயே இவர்களுக்கு இவ்வளவு நல்லதை செய்யும் ராஜயோக வீடு போக போக அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயர்வை தரும் என்பதை அறிக.

கல்விக்கும் கணக்கும் அறிவிக்கும் விலை மதிப்பு இல்லை என அறிக.

***

உலகத்தில் உயர்ந்தது கல்வியாகும்

அதனிலும் உயர்ந்தது கணக்காகும்

அதனிலும் உயர்ந்தது அறிவாகும்

இந்த மூன்றும் அடங்க பெற்று அனுபவமே சாஸ்திரம் ஆகும்.

இதை அமல்படுத்தினால் ஒரு நாடு வல்லரசு பெரும். உண்மையயை உணர்க உயர்வு பெறுக.