
நான் ராமநாதன் தமிழ்நாடு மின்சார வாரிய துறையில் J.E.யாக பணியாற்றி வருகிறேன். என் மனைவி கமலம் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். எங்கள் ஊர் ராசிபுரம் பக்கத்தில் உள்ள வெண்ணந்தூர். 1800 சதுர அடியில் அக்னி மூலை பிளாட்டாக கிழக்குதிசை தெற்குதிசை பார்த்த மனையாக இருபுறமும் சாலை வசதி உள்ள இடமாக வாங்கி இருந்தோம். அதில் ஒரு வீடு கட்டலாம் என எண்ணி இருந்தோம் வாஸ்து சாஸ்திரபடி அதை கட்ட வேண்டும் என எண்ணி வாஸ்து புக் வாங்கி படித்தோம்.
YOUTUBE சென்று வாஸ்துவிவரங்கள் அறிந்தோம். அதில் மிக மிக சிறப்பாக செய்து கொடுத்து இருந்தவர். ஆத்தூரில் உள்ள ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி சார் அவர்கள். அவர் அப்பாய் மெண்ட் வாங்கி ஆத்தூர் சென்று பார்த்தோம். என் காலி மனையின் 4 புற அளவையும் கொடுத்தோம். அவர் அதை வாங்கிபார்த்து விட்டு 4 புற அளவும் 4 அளவாக மாறுபட்ட அளவாக உள்ளது. மூலைகுத்தல் அளவும் மாறுபட்டவையாக உள்ளது. எனவே இந்த தவறான அளவில் உள்ள இடத்தில் அப்படியே வீடு கட்டக்கூடாது. கட்டி னாலும் சரிவாரது என கூறினார். நாங்கள் அவரை நேர்முகமாக வந்து இடத்தை பார்த்து பிளான் தாருங்கள் என கூறினோம்.
அவரும் நேர்முகமாக முன் அனுமதி கொடுத்த தேதியில் வந்து எங்கள் காலி இடத்தைபார்த்து அதை அளந்து ராஜயோக வாஸ்து விதிகளுக்கு உட்பட்ட அளவாக மாற்றி அந்த அளவுக்கு மட்டும் சுற்றுச்சுவர் வர வேண்டும் என கூறி வரைபடம் கொடுத்தார். எங்களுக்கு கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசை என 4 புற அளவிலும் 1 அடி 2 ½ அடி 4 அடி என இடம் வேஸ்டு ஆனது. இருந்தாலும் எங்கள் மனம் சார் கூறியப்படி மட்டும் தான் செய்ய வேண்டும் என உறுதியுடன் இருந்தோம்.சார் மேல் உள்ள நம்பிக்கையால்.

சார் கொடுத்த வரைபடங்கள், ராஜயோக நாட்கள்:
1) மொத்த இடத்தை ராஜயோக வாஸ்து சாஸ்திரபடி அளந்து அந்த அளவுக்கு மட்டும் காம்பவுண்டு சுவர் அமைக்கும் வரைபடம்.
2) மொத்த இடத்தில் எந்த அளவில் எந்த இடத்தில் போர்போட வேண்டும் என்ற வரைபடமும் அவர்தரும் ராஜயோக நாட்களில் போர் போடவேண்டும் என கூறுவர்.
3) தண்ணீர்த்தொட்டி கழிவுத்தொட்டி என்ன அளவில் வருதல் வேண்டும். எந்த இடத்தில் வருதல் வேண்டும் என ஒரு வரைப்படம்.
4) மொத்த அளவில் வீடு எங்கு வருதல் வேண்டும். வீட்டுக்கு 4 புறமும் எவ்வளவு காலி இடம் வருதல்வேண்டும் என ஒரு வரைப்படம்.
5) ராஜயோக வாஸ்து சாஸ்திரப்படி வீட்டு வரைபடமும் அது எந்த அளவில் வந்தால் வெற்றி ஏற்படும் என கணக்கை முன்னிறுத்தி என்னையும் என் மனைவியும் கலந்து ஆலோசித்து எங்களுக்கு ஏற்றபடி ஒரு வரைபடம் போட்டுக் கொடுத்தார்.
6) ராஜாக்கள் காலத்து மனைஅடி குழி முறிவுகணக்கு படி பசுமனை அமைத்து வரவு அதிகமாகவும் வரவுக்குள் செலவு அடங்கி மீதி ஏற்படவும்.வீட்டின் வயது என்ன என்ற விவரங்கள் உள்பட்ட ஒரு விவர பட்டியல் தருவார்.
7) மாடி படி எங்கு வரவேண்டும் போர்டிகோ என்ன அளவில் எங்கு வரவேண்டும். சிறிய கேட், பெரிய கேட் எந்த இடத்தில் என்ன அளவில் வருதல் வேண்டும் என வரைபடம்.
8) மாடியில் ரூம் தண்ணீர்த்தொட்டி அமைக்கும் அளவு வரைபடம்.
9) ஆரம்பிக்கும் நாள் முதல் முடியும் நாட்கள் வரை ராஜயோக நாட்கள் தருவார் (பூமி பூஜை செய்யும் நாள் இருந்து கிரகபிரவேசம் வரை)
10) எங்கள் குடும்ப ஜாதகத்தைப் பார்த்து அதில் உள்ள நிறை குறை தகுந்த சில விஷயங்கள் கூறுவார்.
11) மேலே உள்ள அனைத்து விஷயங்களும் சேர்ந்து 23 பக்கம் வந்துவிடும். இதன் அசல் காப்பி எங்களிடம், நகல் காப்பி அவர் இடமும் இருக்கும்.எங்கள் குடும்ப ஜாதகம் உள்பட சந்தேகம் என வந்தால் நாங்கள் கேட்கும் போது எங்கள் வீட்டு நகல் எடுத்து பார்த்து பதில் கூறுவர். ஒரு பெரிய கம்பெனி நிர்வாகம் செய்வது போல் தான் செய்து கொடுத்த வீட்டில் இருப்பவர்கள் ராஜயோகம் ஏற்பட வேண்டும், என மிக சிறப்புடனும் கண்ணும் கருத்துடனும் செய்து கொடுப்பார்.
மிக நேர்த்தியான முறையில் அவர் கொடுத்ததை பெற்றுகொண்டு அதன்படி வீட்டு வேலையை ஆரம்பித்தோம். கையில் எந்த பணமும் இல்லை. இருப்பினும் லோன் போட்டு செய்தோம். ஒரு முதல் தளம் மட்டும் வீடுகட்ட பிளான் வாங்கினோம். ஆனால் ஏறியதோ இரண்டு வீடு. வீட்டு மேல் ஒரு வீடு கட்டினோம். எப்படி கட்டினோம் என்று எங்களுக்கு புரியவில்லை. பணம் 50,00,000 ஆயிற்று. மேல் மாடியில் கட்டிய வீட்டுக்கு கிரகபிரேவசம் முடிந்த உடன் வாடகைக்கு வந்து விட்டார்கள், நாங்கள் கீழ் வீட்டில் உள்ளோம். எங்கள் கனவை நனவாக்கியவர். எங்களால் சாதிகக முடியாததை சாதித்து காட்டியவர். ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி சார் அவர்கள். எங்கள் மனம் குளிர்ந்தது. இந்த நேர்முக போட்டி 22.9.2019 ஞாயிற்றுக் கிழமையில் தந்து உள்ளோம் என் வாழ்வில் இப்படி ஒரு சிறப்பு (சாதனை) ஏற்பட்டது இதுவரை கிடையாது. என் மனப்பூர்வ சம்மதத்துடன் ரவி சார் பணி நாட்டுக்கு தேவை என கூறுகிறேன்.மனமார்ந்த நன்றிகள் ராமநாதன்.
என்றும் உண்மையுள்ள
ராமநாதன் J.E,
வெண்ணந்தூர்
**
குறிப்பு :
அறிவே செல்வம்
இடம் வாங்கியது 36 லட்சம். வீடு கட்டியது 50 இலட்சம். இரண்டும் சேர்ந்து 86 லட்சம் முதல் ஆகும். வீட்டு வாடகை மாதம் மாதம் வரவு ஆகும். வீட்டுக்காரர் சுகமுடன் அனைத்தும் நல்ல முறையில் இருப்பதால் பேட்டி தருகின்றனர். கட்டிய கட்டிடமே பரம்பரையாக நற்பலனை தரும். வாஸ்து செய்வதே 1 முறை, அதை நல்லமுறையில் அமைத்து கொள்வதே வாழ்க் கையில் பாரம்பரிய வெற்றியாகும்.
வாசகர்
கையில் எந்த பணமும் இல்லாமல் ஒரு வாஸ்து காரரை நம்பி ஆரம்பித்து வீடு கட்டுவது என்பது மிக மிக கவனிக்க கூடிய விஷயம் ஆச்சே அதுவும் மேல் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தவுடன் வீட்டுக்கு குடி வந்து விட்டார்கள் என்பதும் ஆச்சரியம் தான். ராஜயோக வாஸ்து சாஸ்திரம் உண்மை தான் என ஒப்புக்கொள்ள தான் வேண்டும் . கையில் பணம் வைத்துக்கொண்டு ஆரம்பித்த வீடுகள் கட்டடங்கள் பல ஐந்து ஆறு வருடமாக முடியாமல் இன்று உள்ளது வாடகை வீட்டு கட்டி குடிவராமல் பூட்டி உள்ளே வீடுகள் பல உள்ளது, பல வருடங்களாக அப்படி இருக்க இது ஒரு புதுமையாக இருக்கு. அதுவும் வீட்டு உரிமையாளர் கூறுகையில் ஒப்புக் கொள்வதற்கு வேண்டியது தான் சாதாரண வாஸ்துவிற்கும் ராஜயோக வாஸ்துவிற்கும் உள்ள வேறுபாடு தனியாக தெரிகின்றது.