
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ளது. K.R.ரவி ஆகிய எனக்கு 63 வயது நடக்கின்றது. எனக்கு இரண்டு சொந்தவீடு தெற்கு, வடக்குதிசையில் உள்ளது வடக்கு வாசல் வீட்டில் 10 ஆண்டுகள் குடி இருந்ததேன் பின் தெற்கு வீடுகட்டி அதில் 6 ஆண்டுகள் குடி இருந்தேன். எதிர்பார்த்த மேன்மை இல்லை. எனக்கு சொந்தமான 2 ஏக்கர் காலி இடம் உள்ளது அதில் பிளாட்போட்டு விற்பனை செய்துவருகிறேன். வாஸ்து சாஸ்திரபடி விடு கட்டி அதில் குடிஇருக்க வேண்டும் என எனக்கு நீண்ட நாளாக ஆசை எதிர்பார்த்தது போல் வீடு எதுவும் எனக்கு இதுவரை அமையவில்லை. 2019 வருடம் சென்னை புக்பேரில்(கண்காட்சி) 4 ஆயிரத்துக்கு வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம் என பல ஆர்த்தர்கள் எழுதிய புக் வாங்கி வந்து படித்தேன்.அதில் ராஜயோக வாஸ்து, குபேரயோக வாஸ்து என இரண்டு புக் எழுதியவர் ராஜகுரு ரவி அவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் ராஜயோக வாஸ்து என செய்து கொடுத்து மக்கள் மேன்மை பெற்று உள்ளதை அவர்களே பேட்டியாக கொடுத்து உள்ளதை புத்தகத்திலும் ராஜயோக வாஸ்து என YOUTUBE ல் வைத்து உள்ளதை பார்த்த நான் 8 மாதகாலமாக அவருடைய இரண்டு புக்கை பல முறை படித்ததில் வாஸ்து சாஸ்திரத்தில் உண்மைகளை மட்டும் கூறி உள்ளார் என மனப்பூர்வமாக பார்த்து படித்தபின் உணர்ந்தேன் புதிய வீடுகட்டினால் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி சாரை வைத்துதான் கட்டவேண்டும் என முடிவு எடுத்தேன். மற்ற வாஸ்து புத்தகத்திலும், YOUTUBE விளம்பரத்திலும், இவ்வளவு விவரங்கள் இல்லை. ஏதோ என்னமோ கூறி உள்ளார்கள் தவிர நிரூபணம் செய்யப்படவில்லை. 2020 ஆண்டு 80 அடிக்கு 40 அடி என எனது சொந்த மனையில் கிழக்கு திசை பார்த்த மனையில் அக்னி மூலை பிளாட்டில் வீடுகட்டலாம் என்று எண்ணி, ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்களுக்கு போன் செய்து முன் அனுமதி பெற்று, ஆத்தூர் சென்று நானும் என் மகனும் என் கணக்கு பிள்ளையும் கிச்சன், டைனிங், பூஜா, ஹால், பெட்ரூம் அனைத்தும் இந்த அளவில் வர வேண்டுமென எங்கள் மனதில் உள்ளதை மனப்பூர்வமாக கூறினோம். என் காலி இடத்தில் அளவு அதன் வீடியோ எங்கள் குடும்ப ஜாதகம் என கொடுத்தோம்.
அதை ரவி சார் பெற்று கொண்டு ராஜயோக கிழக்கு வாசல் வீட்டு வரைபடம் ஒன்று போட்டு கொடுத்தார். எங்கள் மனத்திற்கு மிகவும் பிடித்து இருந்தது. நாங்கள் அதை பெற்றுகொண்டு வீடுதிரும்பினோம். இருப்பினும் மனதில் ரவி சார் வந்து ஆரம்பித்துக் கொடுத்தால் பரவாயில்லை வீடு வேலை முடியும் வரை 2,3, முறை நேரில் வந்து மேல்பார்வை பார்த்தால் நல்ல இருக்கும் என எண்ணி ரவிசாரிடம் என்மனதில் உள்ளதை கூறினேன் அவரும் வீடுகட்ட ஆரம்பநாள் முதல் முடியும் நாள் வரை 3 முறை நேரில் வந்து பார்த்து செல்கிறேன் என கூறினார். அதன்படியே ரவிசார் நேரில் வந்து பார்த்து மொத்த காலிமனையில் வீட்டுக்கும் காம்பவுண்டு சுவர்க்கும் அவரே அளந்துமுலகுச்சு அடித்து கொடுத்தார்கள் எங்கள் இஞ்சினியர் மேஸ்திரி உதவி ஆட்கள் என அனைவரும் உதவிக்கு கூட இருந்தோம் எங்களுக்கு முழுமன திருப்தி ஏற்பட்டது. 60 லட்சம் மட்டும் பணம் வைத்துகொண்டு ஆரம்பித்தோம் 3 கோடி ரூபாய் செலவு ஆனது. பணம் எப்படி வந்தது என தெரியாது 2020 ஆண்டு ஆரம்பித்தோம் கொரனா பிரியடு என்பதால் அனைத்து இடத்திலும் வேலைகள் தடைபட்டு இருந்தது எங்கள் கட்டடம் மட்டும்நிற்காமல் பணதட்டுபாடு இல்லாமல் மிக மிக நல்ல முறையில் கட்டிடம் அனைத்து வேலையும் நல்லபடி நடந்தது.
இதற்கு காரணம் ராஜயோக நாட்கள் வரைபடமும் அவர் நேரில் வந்து அளந்த கைராசி தான் எனக்கு அனுபவித்த பின்தான் புரிய வந்தது. ரவி சார் அவர்கள் கட்டடம் முடியும் வரை 3 முறை நேரில் வந்து பார்த்தும் அவ்வப்போது எங்கள் மனதில் எழும் சந்தேகங்களை நீக்கி செல்வார்கள். 2021 வருடம் வீடுகட்டி குடியேறினேன்.
3 மாதத்தில் என் பையனுக்கு திருமணம் நடைபெற்றது. பின் ஆண் குழந்தையும் பிறந்தது. நான் 2 கோடி போட்டு ஒரு இடத்தை வாங்கி உள்ளேன். அதுவும் ரவி சார் மேல் பார்வையில் நடந்தது. என்வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் ரவி சார்க்கு போன் மூலமாகவும் அவ்வப்போது கூறிவருவேன். ரவி சார் ஒருமுறை நேரில் வந்து பார்த்து சென்றால் நல்லா இருக்கும் என்று எண்ணினோம். 10-05-2023 புதன் கிழமை அன்று வீடுகட்டி 2 1/2 வருடம் சென்று ராஜகுரு ரவி அவர்கள் நேரில் வந்து எங்கள் பேட்டி எடுத்தார்கள்.

என் குடும்பத்தில் அனைவரும் மன மகிழ்ச்சியுடனும், குடும்ப ஒற்றுமை உடனும் இருப்பதால் ரவி சார்க்கு எங்களால் ஆன ஒரு சில மரியாதைகளை செய்து எங்கள் அனுபவத்தை பேட்டியாக கூறி உள்ளோம்.
என்றும் உண்மையுள்ள
K.R. ரவி,
மாமன்டுர்.
வீட்டு பிளான் வாங்கியது = 2020
வீடு கட்டி குடி ஏறியது = 2021
பேட்டி எடுத்தது = 2023
வாசகர் கேள்வி
கொரனா லாக்டவுனிலும் வீடு தடைபடாது கட்டியதில் ரகசியம் என்ன?
ராஜகுரு ரவி பதில்
ராஜயோக நாட்கள் என தனிஒரு பட்டியல் உள்ள நாட்கள்படி கட்டினால் அனைத்தும் தடையின்றி வெற்றியுடன் நடக்கும்.
வீட்டுக்காரர் மூல கருத்து –
எனக்கு 63 வயது நடக்கின்றது ரவிசார் இடம் வாங்கி வந்த ராஜயோக கிழக்கு வாசல் உள்ள வீட்டில் இருக்கும் மன நிறைவு பொருளாதார உயர்வு, குடும்ப ஒற்றுமையோடு எந்த வீட்டிலும் இல்லை. என் குடும்ப வாழ்க்கையை அடியோடு மாற்றி அமைத்த வீடு ஆகும்.என தொழில் நல்ல பண உயர்வும் பெற்று உள்ளேன் .
(2020 முதல் 2024 வருஷத்துக்குள் இந்த வீடு மட்டும்
இல்லாமல் 3 வீடுகளுக்கு பிளான் வாங்கி உள்ளார், கட்டிடம் கட்டி மேன்மையில் உள்ளேன் . பல கோடிக்கு அதிபதியாகி உள்ளேன் .
வாசகர் கேள்வி
60 லட்சம் கையில் வைத்து கொண்டு ஆரம்பித்து 3 கோடி செலவில் விடு கட்டி முடித்தேன் என கூறிடும் அதன் ரகசியம் என்ன? எப்படி?
ராஜகுரு ரவி பதில்
அதுதான் ராஜயோக வாஸ்து சொன்னால் புரியாது அனுபவித்தால்
தான் புரியும். உண்மை உயர்வு பெறும் உழைப்பு வெற்றி தரும்.
63 வயது வரை அவர்கள் குடும்ப ஜாதக கணக்கை மீறிய பலன் ராஜயோக வீட்டில் இருக்கும் போது நடைபெறுகின்றது என்பதை அனுபவித்த பின் உணர்ந்து கூறி உள்ளனர் ,ஜாதகத்தை மீறி வாஸ்துவால் மக்கள் நன்மை பெறுகின்றனர் என இங்கு அறிந்து கொள்ளவும்.