ஒரு வீட்டுக்கு வரைபடம் பெற்று இரண்டு வீடு கட்டியவர், பெரம்பலூ மாவட்டம் லூர்துசாமி ஆர்மி (கிறிஸ்துவர்) (தெற்கு வாசல் வீடு)

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்களம் கிராமத்தில் வாழும் கிருத்தவர் ஆகிய என் பெயர் லூர்துசாமி. டில்லி பக்கத்தில் உள்ள உத்திர பிரதேசத்தில் ஆர்மியில் உத்தியோக பணி செய்து வருகிறேன்.

எனக்கு 1,635 சதுர அடி தெற்கு பார்த்த காலிமனை உள்ளது அதில் வீடு கட்டலாம் என்று நினைத்து இருந்தபோது YOUTUBE ல் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்கள் மணப் பாறையில் தெற்கு பார்த்த வீடு.கலைசெல்வி ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு முதலில் பழைய வீட்டை திருத்தி கொடுத்த வகையில் அவர்கள் கஸ்டம் தீர்ந்து நிறைவாக இருப்பதாகவும் அதன் பின் ராஜயோக புது வீட்டுக்கு கீழ் பிளோர்க்கு மட்டும் பிளான் ரவி சார் இடம் பெற்று 2-3 பிளோர் கட்டி நல்ல முறையில் இருப்பதை அவர்கள் கூறுவதை கேட்கவும் பார்க்கவும் செய்த நான் என் மனதில் முழுமையாக ராஜகுரு ரவி சாரிடம் நம்பிக்கை ஏற்பட்டது அதன்பின் ரவி சாரை அழைத்து வந்து பார்க்க வேண்டும் என முடிவு எடுத்து ரவி சார் அவர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு என் நிலைமையை விவரமாக கூறி நான் குடியிருந்து வரும் என் பழைய வீடும் , புதிய இடம் இவை இரண்டையும் பார்த்து புதிய வீட்டுக்கு வரைபடம் போட்டு தரவும் நீங்கள் வீடு கட்ட ஆரம்ப முதல் முடியும் வரை மூன்று முறை நேர்காணல் செய்து தரும்படி கூறினேன். ராஜயோக தெற்கு பார்த்த வீட்டுக்கு பிளான் போட்டு கீழ்வீட்டுக்கு மட்டும் கொடுத்தார். கொடுக்கும்போதே மேல்வீடும் ஏறும் என ஒரு மாடிக்கு இரண்டு மாடி ஏறும் என கூறி கொடுத்தார். நாங்கள் அதை பெற்றுக் கொண்டு வேலை ஆரம்பித்து கீழ் வீடு வேலை முடிந்து ஒரு வீடு மட்டும்தான் பின் அதன் மேல் முதல் தளத்தில் 2 வீடுகட்ட ரவி சாரிடம் பிளான் இரண்டாம் முறையாக சென்று வாங்கி கட்டி அதன் மேல் 600 சதுர அடியில் ரூம் அமைத்து 3000 சதுர அடி மொத்த வேலையும் 9 மாதத்தில் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் முடிந்தது.16.6.2021ம் ஆண்டு கிரக பிரவேசம் செய்து புது வீட்டுக்கு குடியேறினோம். 5.8.2020ம் ஆண்டு ஆரம்பித்தோம். எங்களுக்கு அக்கம் பக்கத்தில் மறைமுக எதிரிகள் அதிகம் என்பதை ரவி சாரிடம் கூறி எதிரிகளை அடக்கி ஆளும் சிங்கமனை வேண்டும் என கூறினோம். அவரும் எங்கள் வீடு குழி 133 என்றும் அதன் பலன் சிங்கமனை வரவு = 12 செலவு – 5, மீதி = 7, வயது 96 என்று குறித்து கொடுத்தார். நாங்கள் அதன் அளவு சிறிதும் மாறாமல் அவர் கொடுத்தபடியே ராஜயோக வாஸ்து நாட்கள் உள்ளபடியும் கட்டி முடித்தோம்.ஆரம்பத்தில் எங்கள் மறைமுக எதிரிகளால் எங்களுக்கு ஒரு சில பயம் வந்தது கட்டடம் ஏற ஏற அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அமைதி ஆகிவிட்டார்கள். எங்கள் வாழ்க்கையில் இது போல் ஒரு வீடு கட்டுவோம் என்று நினைத்து பார்த்தது இல்லை.

மிக பிரம்மாண்டமாக அமைந்துவிட்டது. எங்களுக்கு மிக்க சந்தோசம் ஆகும். ராஜயோக கைராசிக்காரர் ரவி சார் அவர்களுக்கு நன்றிகள்.

என்றும் அன்புள்ள

லூர்துசாமி , அர்மி,

 அன்னமங்களம்.

வாசகர் கேள்வி:

கிறிஸ்த்தவர்கள் கூட வாஸ்து சாஸ்திரம் பார்க்கின்றார்களா ஏன்? எப்படி?

ஆசிரியர் பதில்:

வாஸ்து சாஸ்திரம் என்பது சாதி, மதம் சார்ந்தது அல்ல. இது 1 ஒரு கட்டட கலை கணக்கு ஆகும். கணக்கு சரியாய் இருந்தால் வாழ்வில் வெற்றி பலனைத் தரும். அதன்படியே கிறிஸ்துவர்ராக இருந்தாலும் அவர்களும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்து கொடுத்தேன். கணக்கு என்பது எல்லோருக்கும் ஒன்றே ஆகும். உண்மை இருந்தால் அதை அனைவரும் அனுபவிக்கலாம். சாதி, மதம், குளம், கோத்திரம் கிடையாது.

வாசகர் கேள்வி :

அக்கம் பக்கம் அவர்களுக்கு எதிரி இருந்தும் எப்படி சிங்கம் மனை வைத்து அவர்களை அடக்கி விட்டீர்கள் அதன் ரகசியம் என்ன?

ராஜகுரு ரவி பதில் :

சிங்கமனை வைத்தால், ராஜயோக மான வீட்டின் வரைபடம் எதிரியை அடக்கும் ராஜயோக நாட்கள் என மூன்று கணக்குப்படி, அவர்களுக்கு என்று தனி ஒரு பட்டியல் கணக்கிட்டு கொடுத்தேன். அதன்படி அவர்கள் செய்து கொள்ளவே, எதிரி அடங்கினார்கள்.