வடக்கு வாசல் 10 வருடமாக நின்ற வீடும் திருத்திய வாஸ்துவும், வெற்றி பலனும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜப்பார் (முஸ்லிம்)

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காளி கிராமத்தில் வசித்து வரும் ஜப்பார் ஆகிய நான் முஸ்லீம் ஆவேன். நான் கிருஷ்ணகிரி G.H. ஆஸ்பிட்டலில் மெடிக்கல் மருந்து பகுதியில் டிரைவராக பணி புரிகின்றேன். எனக்கு சொந்தமான 25 சென்டு இடம் வடக்கு திசை பார்த்து உள்ளது அதில் வீடு கட்டலாம் என எண்ணி 3.1.2010ம் தேதி அன்று ஒரு வாஸ்து வல்லுனரை அனைத்து வந்து அவர் கொடுத்த அளவுபடி 600 சதுர அடியில் வீடு கட்ட ஆரம்பித்தோம். வீட்டு 3 அடி கடக்கால் மட்டம் வந்து நின்றுவிட்டது. ஏன் என்று புரியவில்லை. என்னால் ஆன வாஸ்துகாரர்கள், 2, 3 போர்கள் வர செய்து அவர்கள் கூறியதை செய்தும் பலன் ஏற்படவில்லை. இடத்தில் பில்லி, சூனியம் இருப்பின் அதற்கு பரிகாரம் செய்தும் பலன் ஏற்படவில்லை. என் மன விரக்தியால் விட்டு விட்டேன். என்ன செய்து என்று ஒன்றும் புரியவில்லை. பின் 10 வருடம் கழித்து ராஜயோக வாஸ்து புத்தகம் என்று கிருஷ்ணகிரியில் வாங்கி படித்தேன்.

அதில் ராஜகுரு ரவி சார் அவர்கள் பல ஊர்களில் பல வீடுகள் வரைபடம் போட்டு கொடுத்து மக்கள் மேன்மை அடைந்து இருப்பதை பார்த்தும் படித்தும் உணர்ந்தேன். ரவி சாரை நேரில் சென்று சந்தித்தால்தான் என் காலிமனை வீடு கட்டலாம் என எனக்குள் ஒரு நம்பிக்கை உதயமானது. ராஜகுரு ரவி அவர்களுக்கு போன் செய்து தொடர்பு கொண்டு பேசும் போது என் நின்ற இடத்தின் 4 பக்க அளவு இரு குறுக்கு அளவு மொத்த 25 சென்டில் எந்த இடத்தில் கட்டடம் அமைக்க உள்ளது. நான் தற்போது குடியிருக்கும் வீட்டின் அளவு மொத்த வரைபடம் அடிக்கணக்கில் வேண்டும் எனவும் அதன் வீடியோவும் வேண்டும் என கூறினார். எனக்கு ஜாதகம் இல்லை. எனவே, அவர் கூறியதை அனைத்தையும் எடுத்து கொண்டு ஆத்தூர் சென்று அவரை பார்த்து கொடுத்தேன். பழையது 600 சதுர அடி புதுசு 500 சதுர அடி இரண்டும் சேர்ந்து ஒரே வீடாக 1100 சதுர அடிக்கு வடக்கு திசை வீடு வரைபடம் வேண்டும் என கூறினேன். அவர் பழையவீட்டு வரைபடத்தை திருத்தி அதில் இருந்து ராஜயோக வடக்கு வாசல் வீட்டு படம் கொடுத்தார் 23 பக்கம் கொண்டது முதலிலிருந்து வீடு கட்டி முடியும் வரை ராஜயோக நாட்களும் குழிகணக்கு முறைப்படி வரைபடமும் கொடுத்து அதில் உள்ளபடி அமைத்து கொள்ளுங்கள் என கூறினார்கள். நான் 12.3.2020 தேதி வாங்கி வந்து வீட்டு வேலை ஆரம்பித்து கீழ் வீடு 1100 சதுர அடி முடித்து அதன் மேல் ஒரு ரூம் அட்டாச்சு பாத்ரூம் உடன் 400 சதுர அடியும் கட்டி வீட்டு வேலை பூர்த்தி ஆனது. 6 மாதத்தில் மடமட என்று வேலை முடிந்துவிட்டது ஆரம்ப நாள் முதல் ரவி சார் அவர்களுக்கு இங்கு நடக்கும் அனைத்து விஷயங்களும் என் மகன் போனில் மூலமும் வீடியோவாக அனுப்புவோம் அதை பார்த்து பதில் கூறுவார். சந்தேகம் சிறிது கூட இல்லை வேலை முடிந்தது 10 வருடமாக நின்ற வீடு கட்டி முடிந்தது. எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் மிக சந்தோசம் அடைந்தோம். ராஜகுரு ரவி சார் அவர்கள் ஒருமுறை வந்து பார்த்து சென்றால் மனநிம்மதியாக இருக்கும் என்று அவரை அழைத்தோம். அவரும் நேரில் வந்து அவர் கொடுத்த அளவுக்கு வீடுகட்டி உள்ளோமா என்று மீட்டர் பிடித்து அளந்து பார்த்தார்.

அவர் கொடுத்த ராஜயோக நாட்களில் செய்ததை குறித்து வைத்து உள்ளீர்களா என அவர் கொடுத்த நாட்களில் எங்கள் ஒவ்வொரு செயல்பாடுகளும் குறித்து வைத்து இருந்ததை காண்பித்தோம். (பூமி பூசை செய்யும் நாள் வாசல்கால் வைக்கும் நாள் என அனைத்து உள்பட) பின் நடந்த விவரங்களை அனைத்தும் பேட்டியாக கூறி உள்ளேன். இன்னும் 2 மாதத்தில் காம்பவுண்டு சுவர் கட்டியும் சோகேஷ், டிசைன் வேலைகள் முடித்து குடி ஏறுவோம் 10 லட்சம் வைத்து கொண்டு ஆரம்பித்தேன். 20 லட்சத்திற்கு மேல் ஆகிவிட்டது. அனைத்தும் நல்ல முறையில் நடந்ததற்கு ராஜகுரு ரவி சார் அவர்களுக்கு நன்றிகள்.

பேட்டி கொடுத்த தேதி 20.11.2020. முஸ்லிம் ஆக இருந்தும் வாஸ்து சாஸ்திரத்தை நம்பாத நான் ராஜகுரு ரவி சார் இடம் சென்று வந்த பின் உண்மைதான் என என் அனுபவத்தினால் உணர்ந்து நம்பினேன் மிக்க நன்றிகள்.

                                                                                                           என்றும் உண்மையுள்ள

                                                                                                              ஜப்பார் GH. டிரைவர்